இதன் மூலம் உலகெங்கும் உள்ள செல்லியலின் வாசகர்கள் உடனுக்குடன் MH 370 குறித்த செல்லியல் செய்திகளை இணையத் தளங்கள் மூலமாகவும், ஃபேஸ் புக் என்ற முகநூல் பக்கங்களின் வாயிலாகவும், ஐபோன்கள் மற்றும் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்ட கைத்தொலைபேசிகளில், தட்டைக் கணினிகளில் (ஐபேட்) செல்லியல் செயலி வாயிலாகவும் படித்து வருகின்றனர்.
அதே வேளையில் செல்லியலில் வெளிவரும் காணாமல் போன MH 370 விமானம் குறித்த செய்திகளை மலேசியாவில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கைகளும் மறுநாள் தங்களின் பதிப்புகளில் அப்படியே வரிக்கு வரி மறு பிரசுரம் செய்து நமது செய்திகளை அச்சு வடிவில் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கின்றன.
அந்த வகையில் நேற்று நமது செல்லியலில் வெளியிடப்பட்ட கீழ்க்காணும் செய்திகள் அனைத்தும் இன்றைய 12 மார்ச் 2014 தேதியிட்ட ‘தினக்குரல்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம்: