Home கலை உலகம் பரவை முனியம்மாவுடன் நடனமாடிய சிவகார்த்திகேயன்!

பரவை முனியம்மாவுடன் நடனமாடிய சிவகார்த்திகேயன்!

531
0
SHARE
Ad

sivakarthikeyan-shakes-legs-with-paravai-muniyamma-745x483சென்னை, மார்ச் 13 – ராயபுரம் பீட்டர்.. என்ற பாடலுக்காக நாட்டுப்புறப் பாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுடன் இணைந்து நடனமாடினார் சிவகார்த்திகேயன். மான் கராத்தே படத்துக்காக இந்தப் பாடலும் நடனமும் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் ராயபுரத்தில் வசிக்கும் பீட்டர் என்ற இளைஞராக வருகிறார் சிவகார்த்திகேயன். வட சென்னைப் பகுதி மக்கள் பேசுவது போன்ற சென்னைத் தமிழில் ஒரு பாடல் தேவைப்பட்டது. அதை ராஜா எழுத, அனிருத் இசையமைத்தார்.

சிவகார்த்திகேயன் தன் சொந்தக் குரலில் பாடினார். இந்தப் பாடலுக்கு படத்தில் இட்லி விற்பவராக வரும் பரவை முனியம்மாவும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடினார். படத்தில் இந்தப் பாடல் பெரிய சிறப்பாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.