Home நாடு சீன செயற்கைக்கோள் கண்டறிந்த பகுதிக்கு மலேசிய விமானங்கள் விரைந்தன!

சீன செயற்கைக்கோள் கண்டறிந்த பகுதிக்கு மலேசிய விமானங்கள் விரைந்தன!

525
0
SHARE
Ad

graph13_540_614_100கோலாலம்பூர், மார்ச் 13 – உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக சீன செயற்கைக்கோள் கண்டறிந்த சீன கடற்பகுதிக்கு, மலேசிய தேடுதல் விமானங்கள் விரைந்துள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.

இது குறித்து இடைக்காலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக சீன செயற்கைக்கோள் கண்டறிந்த சீன கடற்பகுதிக்கு மலேசிய மீட்புப் படையினர் சென்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீன செயற்கைக்கோள் கண்டறிந்த அந்த பகுதியில் ஏற்கனவே வியட்நாம் தேடுதல் பணியை செய்தது என்றும், எனினும் மீண்டும் தங்களது விமானத்தை அங்கு அனுப்பியுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் சார்பாக அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தென் சீனக் கடலில் உடைந்த விமானத்தின் பாகங்கள் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் படங்களை சீன இராணுவ இலாகா ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது. காணாமல் போன விமானம் சென்ற பாதையில் இந்த உடைந்த பாகங்கள் கிடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.