Home வணிகம்/தொழில் நுட்பம் நியூயார்க்கில் கூகுளின் முதல் விற்பனை நிலையம்!

நியூயார்க்கில் கூகுளின் முதல் விற்பனை நிலையம்!

498
0
SHARE
Ad

google_store_001மார்ச் 14 – உலகின் முன்னணி தேடு தளமான (Search Engine) கூகுள், முதல் முறையாக தனது நிறுவனத்திற்கு நிரந்தர விற்பனை நிலையம் ஒன்றைத் தேடி வருகின்றது.

விரைவில் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹட்டன் என்ற இடத்தில், கிரீன்ஸ்ட்ரீட் பகுதியில் தங்களது புதிய விற்பனை நிலையத்தை திறக்கவுள்ளதாக அண்மையில் ‘Crains’ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புதிய விற்பனை நிலையம் திறப்பதின் மூலம் தனது உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், கூகுள் நிறுவனம் விற்பனை நிலையம் அமைக்கப் போகும் இடத்தில் தான் பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையமும் உள்ளது.