Home கலை உலகம் ‘வாலிப ராஜா’ படத்தில் மனநல மருத்துவராக சந்தானம்!

‘வாலிப ராஜா’ படத்தில் மனநல மருத்துவராக சந்தானம்!

447
0
SHARE
Ad

ComedianActorSanthanamBusyIn2011-1சென்னை, மார்ச் 14 – எச்.முரளி வழங்க, வேங்ஸ் விஷன்–1 நிறுவனம் தயாரிக்கும் படம் வாலிப ராஜா.  இந்த படத்தில், சந்தானம் மனநல மருத்துவராக நடித்து இருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் ‘வாலிப ராஜா’ படத்தில் சேது–விசாகா காதல் ஜோடியாக நடித்துள்ளனர்.

இன்னொரு நாயகியாக நுஷ்ரத் நடித்து இருக்கிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், சித்ராலட்சுமணன், ஜெயப்பிரகாஷ், பஞ்சு சுப்பு, தேவதர்சினி ஆகியோரும் நடித்துள்ளனர்.லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைத்து இருக்கிறார். சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது