Home நாடு ஒட்டுமொத்த மலேசியாவும் அவரை அறைய காத்திருக்கிறது – கைரி பதிலடி

ஒட்டுமொத்த மலேசியாவும் அவரை அறைய காத்திருக்கிறது – கைரி பதிலடி

864
0
SHARE
Ad

khairyகாஜாங், மார்ச் 15 – தன்னை முதலை வேகத்தில் அறைவேன் என்று கூறிய போமோவை ஒட்டுமொத்த மலேசியாவும் அறைவதற்கு காத்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.

காஜாங்கில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் காலை உணவு நிகழ்வில் கலந்து கொண்ட கைரி, “அவர் என்னை அறைவேன் என்று கூறியுள்ளார். ஆனால் மலேசியா மக்கள் அனைவரும் அவரை அறைய காத்திருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.

“அவர் செய்யும் முறைகள் இஸ்லாமில் கூறப்பட்டது அல்ல. அவரது மிரட்டல்களுக்கெல்லாம் நான் செவி சாய்க்கப்போவதில்லை” என்று கைரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி) என்ற அந்த நபர் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் விமானத்தை கண்டுபிடிப்பதாகக் கூறி சில மாந்திரீக சடங்குகளை நடத்தினார்.

அதற்கு எதிராக கைரி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலறிக்கை வெளியிட்ட போமோ, தன்னுடன் கைரியை மோதிப் பார்க்குமாறும், முதலை வேகத்தில் அறைவேன் என்றும் சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.