Home இந்தியா கர்நாடகாவில் 5 முன்னாள் முதல்வர்கள் போட்டி!

கர்நாடகாவில் 5 முன்னாள் முதல்வர்கள் போட்டி!

577
0
SHARE
Ad

downloadபெங்களூரு, மார்ச் 18 – கர்நாடகாவில்  இந்த நாடாளுமன்றத் தேர்தலில், மாநில, முன்னாள் முதல்வர்கள்  ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். இதனால், அம்மாநில தேர்தல் களம், சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநிலத்தின், 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், அடுத்த மாதம், 17ல், தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலில், முன்னாள் முதல்வர்களான, தேவகவுடா, வீரப்ப மொய்லி, தரம் சிங், எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகிய, ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.  இவர்களில், எடியூரப்பா, முதல் முறையாக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், முன்னாள் முதல்வர்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், வீரப்ப மொய்லி மற்றும் தரம் சிங் ஆகிய, இருவரை போல், பா.ஜ.க.விலும், எடியூரப்பா மற்றும் சதானந்த கவுடா போட்டியிடுகின்றனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான, தேவகவுடா போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருக்கும், வீரப்ப மொய்லி, கர்நாடகாவின், சிக்கபல்லாபூர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

உடுப்பி மாவட்டத்தின் கடலோர நகரமான, மூடபித்ரியை பூர்வீகமாக கொண்ட மொய்லி, தக் ஷின கன்னடா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, கடந்த முறை தேர்வாகியிருந்தார்.

2009 தேர்தலில், சிக்கபல்லாபூரில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற அவர் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில், மாநில முன்னாள் அமைச்சர், பி.என்.பச்சே கவுடா நிறுத்தப்பட்டுள்ளார். தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, அந்த தொகுதிக்கு, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.