Home கலை உலகம் அஞ்சலி எங்கே? இயக்குனர்கள் கவலை!

அஞ்சலி எங்கே? இயக்குனர்கள் கவலை!

1360
0
SHARE
Ad

AnjaliIndexசென்னை, மார்ச் 18 – அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என தமிழில் வரிசையாக படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. திடீரென்று சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு ஐதராபாத் சென்ற அவர் அங்கேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவர் உடல் எடை அதிகரித்துவிட்டதால் படங்களை குறைத்துக்கொண்டார் என்றும், வெளிநாடு சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியான வண்ணம் இருந்தது. கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக கடந்த மாதம் இணையத் தளங்களில் தகவல் வெளியானது.

அதை மறுத்து பதில் அளித்திருந்தார் அஞ்சலி. இந்நிலையில் அஞ்சலியை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய விரும்பி அவரை இயக்குனர்கள் சிலர் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்பேசி அனைத்துவைக்கப்பட்டிருக்கிறதாம்.

#TamilSchoolmychoice

ஐதராபாத்தில் அவர் இல்லை என்றும் அவர் வெளிநாடு பறந்துவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதேசமயம் டோலிவுட் இணையத்தளம் ஒன்றில் அஞ்சலியின் புதிய புகைப்படம் ஒன்றும் அதில் அவர் ஒல்லியானத் தோற்றத்தில் இருப்பதுபோல் வெளியாகியுள்ளது.

அத்துடன் புது இயக்குனர் ஒருவர் அஞ்சலியை சந்தித்து கதை சொன்னதாகவும், கதாநாயகியை மையமாக வைத்த கதை என்பதை அறிந்ததும், அதில் நடிக்க அஞ்சலி ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முரண்பட்ட தகவலால் அவரிடம் கதை சொல்ல விரும்பும் இயக்குனர்கள் கவலையில் உள்ளனர்.