Home நாடு கடைசியாக கேட்ட வார்த்தை – துணை விமானியின் குரல்!

கடைசியாக கேட்ட வார்த்தை – துணை விமானியின் குரல்!

600
0
SHARE
Ad

f10cb3bbef5b44099de660ccb4740014கோலாலம்பூர், மார்ச் 18 – காணாமல் போன மாஸ் MH370 விமானத்தில், கடைசியாக ‘ஆல்ரைட் குட்நைட்’ என்று சொன்ன குரல் துணை விமானி பாரிக் அப்துல் ஹமிட் என்று மாஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆரம்பகட்ட விசாரணையில் பதிவு செய்யப்பட்டிருந்த குரல், துணை விமானியின் குரல் தான் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜாவ்ஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

விமானிகள் அறையில் இருந்து அதிகாலை 1.07 மணியளவில் கடைசியாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் இது தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் ஒருவேளை விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் அறிக்கை முறைமைகள் (Aircraft Communications Addressing and Reporting System) துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஜாவ்ஹாரி தெரிவித்துள்ளார்.