Home இந்தியா கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன, திமுகவை விட்டு விலகமாட்டேன் – அழகிரி!

கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன, திமுகவை விட்டு விலகமாட்டேன் – அழகிரி!

552
0
SHARE
Ad

17-1395052298-azhagiri9-600மதுரை, மார்ச் 18 – கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன என்றும், தாம் ஒருபோதும் திமுகவை விட்டு விலகப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உரிப்பினருமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.

மதுரை தயா மஹாலில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று காலை முதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், புதிய கட்சி பற்றிய முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் தயா மஹாலில் கூடினார்கள்.

இந்நிலையில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி, கூறியதாவது, கட்சியில் என்ன நடந்தது என்பது குறித்து , உங்களிடம் கலந்து பேசவும், அடுத்து நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கவே நான் உங்களை இன்று அழைத்துள்ளேன்.

#TamilSchoolmychoice

தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார். கருணாநிதியை தீய சக்தி சூழ்ந்துள்ளது. திமுக நான் வளர்த்த கட்சி. அக்கட்சியைவை விட்டு விலகப்போவதில்லை.  நீதிக்காகக் போராடப்போகிறேன்.

கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். இன்னும் தொடர்ந்து பல மாவட்ட கட்சியின் அதிருப்தியாளர்களை சந்திக்கவுள்ளேன். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் குறித்து ஆராயப்படும்” என்று அழகிரி கூறியுள்ளார்.

அழகிரியின் பேச்சுக்களை கவனிக்கும் போது அவர் இப்போதைக்கு புதுக்கட்சி எதுவும் தொடங்கி திமுகவிற்கும் ,கருணாநிதிக்கும் நெருக்கடி கொடுக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.