Home வணிகம்/தொழில் நுட்பம் எம்.ஆர்.டி இரண்டாம் இரயில் தடம் அமைக்க அரசு அனுமதி!

எம்.ஆர்.டி இரண்டாம் இரயில் தடம் அமைக்க அரசு அனுமதி!

584
0
SHARE
Ad

MRT1_trainபுத்ரா ஜெயா, மார்ச் 18 – சுங்கை பூலோ மற்றும் புத்ராஜெயாவை இணைக்கும் விரைவு இரயில் சேவையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிக்கு கூட்டரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக எம்.ஆர்.டி நிறுவனம் (Mass Rapid Transit Corp Sdn Bhd) அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ வரஹ் அசார் அப்துல் ஹமீது கூறுகையில், “விரைவு இரயில் இரண்டாம் தடம் அமைப்பதற்கான பணிகள் பற்றி அரசு ஆலோசித்து வருகின்றது, இதுபோன்ற போக்குவரத்துச் சேவைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பைத் தரமுடியும்” என்று கூறினார்.

மேலும் அவர், “ஒட்டுமொத்தத் திட்டத்தின் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் தயாராகும் என்றும், எம்.ஆர்.டி இரயில் தடம் 1-ன் பணிகள் 2017 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நிறைவுபெறும்” என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிஐஎம்பி ஆய்வு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், எம்.ஆர்.டி இரயில் தடம் 1-ன் ஒப்பந்ததாரர்களே, இரயில் தடம் இரண்டையும் வாங்குவதற்கு முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது.