Home தொழில் நுட்பம் மைக்ரோசாஃப்ட் ‘Surface 2’ கையடக்கக் கணினி அறிமுகம்!

மைக்ரோசாஃப்ட் ‘Surface 2’ கையடக்கக் கணினி அறிமுகம்!

667
0
SHARE
Ad

surface2lte-heroமார்ச் 18 – உலகின் முன்னணி கணினி மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது புதிய சர்ஃபேஸ் 2 (Surface 2) கையடக்கக் கணினி நாளை முதல் விற்பனைக்கு வரும் என இன்று அறிவித்துள்ளது.

ஏடி மற்றும் டி 4 ஜிபி எல்டிஇ (Long Term Evolution) தொழில்நுட்பத்திற்கு ஏற்புடையதாக இயங்கும், இந்த கையடக்க கணினியின் விலை 679 அமெரிக்க டாலராகும்.

இந்த கையடக்கக் கணினி ஆனது 10.6 அங்குலத் தொடுதிரை, விண்டோஸ் 8.1 ஆர்டி இயங்குதளம், என்விஐடிஐஎ டெக்ரா 4 செயலி, 64 ஜிபி சேமிப்புக் கொள்ளளவுத் திறன் என பல சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுமட்டுமல்லாது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் , சர்ஃபேஸ் 2 வை வாங்கும் தனது  பயனீட்டாளர்களுக்கு, ஸ்கைப் மூலம் ஒருவருடத்திற்கு இலவச தரைவழி தொலைபேசி அழைப்புகள், வரம்பில்லா இணையம், 200ஜிபி ஒற்றைத் தனித்த நினைவகம் (OneDrive storage) என பல சலுகைகளையும் அறிவித்துள்ளது.