Home உலகம் கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைப்பு!

கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைப்பு!

562
0
SHARE
Ad

140306-russian-flag-5a_e2d95a4f8b8c9c2518f05506c0e1ba95கீவ், மார்ச் 19 – உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்த, கிரிமியா மாகாணம் தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டு விட்டதாக, ரஷ்ய அதிபர், புடின் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன்’ உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், அதிபராக இருந்த யானுகோவிச், இதற்கு உடன்படவில்லை. இதனால், மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை சமாளிக்க முடியாத, அதிபர் யானுகோவிச், ரஷ்ய எல்லையில் உள்ள கிரிமியா மாகாணத்தில் தலைமறைவானார்.

கிரிமியா மாகாணத்தில், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைக்க, ரஷ்ய அதிபர் புடின், மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

கிரிமியா மாகாணத்தை, உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, மக்களிடம் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்க, அப்பகுதி மக்கள் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து, 100 தொகுதிகளை கொண்ட கிரிமியா மாகாண சட்டசபை, உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக, நேற்று முன்தினம் அறிவித்தது.

அது மட்டுமல்லாது, இந்த மாகாணத்தை, ரஷ்யாவின் ஒரு மாகாணமாக அங்கீகரிக்கும்படி, ரஷ்யாவிடம் விண்ணப்பித்தது. இது தொடர்பான ஒப்பந்தம், மாஸ்கோவில், நேற்று கையெழுத்தானது.

கிரிமியா பிரதமர், செர்ஜி அக்சியோனோவும், ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், கிரிமியா, ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டதாக, அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இதை, அமெரிக்கா தலைமையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. பொருளாதார தடை விதிக்கப் போவதாக, மிரட்டி வருகின்றன.