Home கலை உலகம் திரிஷா இல்லன்னா நயன்தாரா – ஜி.வி.பிரகாஷ்!

திரிஷா இல்லன்னா நயன்தாரா – ஜி.வி.பிரகாஷ்!

609
0
SHARE
Ad

music-director-gv-prakash2சென்னை, மார்ச் 20 – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக அறிமுகமாகும் பென்சில் படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து அவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, நான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள், அடுத்த படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை ரிபெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேஜர் ரவி உதவியாளர் ஆதிக் இயக்குகிறார்.

திரிஷாவும் நயன்தாராவும் முன்னணி நடிகைகள். அவர்கள் பெயரை படத்துக்கு பயன்படுத்த அனுமதி கேட்டோம். ஒருவர் அனுமதி கொடுத்துள்ளார்.  பாரதிராஜா மற்றும் ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நான் இசையமைக்கிறேன். ஒரே நேரத்தில் இசை, நடிப்பு என இரு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறினார்.