Home தொழில் நுட்பம் பிரிட்டனில் ‘Chromecast Wi-Fi Dongle’ அறிமுகம்!

பிரிட்டனில் ‘Chromecast Wi-Fi Dongle’ அறிமுகம்!

484
0
SHARE
Ad

Lumia-1020-WP_20130724_11_15_57_Pro-580x326மார்ச் 20 – கூகுள் நிறுவனம் பிரிட்டனில் தனது ‘Chromecast Wi-Fi Dongle’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சாதனத்தின் மூலம் பயனர்கள் தங்கள் தொலைக்காட்சியை இணையத்துடன் இணைத்து நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க முடியும்.

இந்த சாதனத்தை HDMI போர்ட் வழியாக தொலைக்காட்சியுடன் இணைத்தால், இந்த சாதனமானது ஏற்பியாக செயல்பட்டு, திறன்பேசிகள் மற்றும் டேப்கள் மூலம் அனுப்பப்படும் சமிக்ஞைகளைத் தொலைக்காட்சிக்கு அனுப்பும்.

#TamilSchoolmychoice

மேலும் கணிப்பொறி பயனாளர்கள் “கூகுள் குரோம்” (Google Chrome) உலாவி மூலம் இந்த சாதனத்தை இயக்க முடியும். 30பவுண்ட்களை விலையாகக் கொண்ட இந்த சாதனம், வரும் ஜூலை மாதம் முதல் அமெரிக்கச் சந்தைகளுக்கு வருகின்றது.

இந்த சாதனத்தை திறன் தொலைக்காட்சிகளில் (Smart Tv) மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.