Home இந்தியா பணத்துக்காக தன்மானத்தை விற்றுவிடாதீர்கள் – கமல் ஹாஸன்!

பணத்துக்காக தன்மானத்தை விற்றுவிடாதீர்கள் – கமல் ஹாஸன்!

429
0
SHARE
Ad

17-1395039138-kamal-haasan-pressmeet3-600-jpgசென்னை, மார்ச் 20 – வேட்பாளர் கொடுக்கிற சிறிய தொகைக்காக உங்கள் தன்மானத்தை விற்றுவிடாதீர்கள் என்று கமல்ஹாஸன் கானொலி பிரச்சாரத்தில் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் என்பது இன்றைய தேர்தல்களில் சகஜமாகிவிட்டது.

இந்த முறை அதை முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்பட காட்சி ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

இதில் நடிகர் கமலஹாசன் தோன்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார். இதற்கான கானொலி நேற்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதனை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

25 வினாடிகள் ஓடக்கூடிய இந்த காணொளி நடிகர் கமலஹாசன் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள், நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளில் மிகவும் முக்கியமானது வாக்களிப்பதாகும்.

வேட்பாளர்களின் தகுதிகளை உணர்ந்து சுயசிந்தனையுடன் ஓட்டுப்போடுவதே வாக்களிப்பதாகும். இந்த வேட்பாளர் நிறைய பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் நிறைய பணம் கொடுத்தார் என எண்ணி வாக்களிக்காதீர்கள்.

நாம் நமது எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு சிறிய தொகைக்காக தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள்.

ஜனநாயகம் தழைக்க சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிப்போம். எந்த சூழ்நிலையிலும் வாக்கினை விற்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம் என அவர் கூறியுள்ளார்.