Home இந்தியா ஜெயலலிதா வழக்கு தொடர அதிகாரமில்லை – தேர்தல் ஆணையம்!

ஜெயலலிதா வழக்கு தொடர அதிகாரமில்லை – தேர்தல் ஆணையம்!

587
0
SHARE
Ad

Tamil-Daily-News_76526606083சென்னை, மார்ச் 20 – பேருந்து,  குடிநீர் பாட்டிலில் இரட்டை இலையை மறைக்க உத்தரவிட்டது சட்டப்படி  சரியானதுதான். இதை எதிர்த்து வழக்கு தொடர ஜெயலலிதாவுக்கு  அதிகாரமில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த வழக்கில், குடிநீர் பாட்டில், பேருந்து அரசு மற்றும் பொது  சொத்துக்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதா படத்தையும், இரட்டை இலை  சின்னத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் விசாரித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணைய வழக்கறிஞர்  ஜி.ராஜகோபால் ஆஜராகி, பேருந்து, குடிநீர் பாட்டிலில் இரட்டை  இலையை மறைக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை தற்காலிகத் தலைமை நீதிபதி அக்னி கோத்ரி, நீதிபதி  சிவஞானம் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்து, தேர்தல் ஆணையம் பதில்  அளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணைய மூத்த வழக்கறிஞர்  ஜி.ராஜகோபால் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர்  9581_S_jayalalitha-கூறியிருப்பதாவது,  இரட்டை இலையை மறைக்கச்சொல்ல தேர்தல்  ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

அவற்றில் இருப்பது அதிமுக  சின்னமே இல்லை என்று கூறும் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்தது ஏன்? பாதிக்கப்பட்டது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  இல்லை. அவருக்கு இத்தகைய வழக்கு தொடர அதிகாரமும் இல்லை.

அரசுக்குத்தான் நாங்கள் உத்தர விட்டுள்ளோம். இலையை நீக்க  சொல்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே  உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு செலவில் சின்னத்தை  விளம்பரப்படுத்தக்கூடாது.தேர்தல் ஆணைய அதிகாரத்தில் நீதிமன்றம்  தலையிட முடியாது.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது தவறானது.  பேருந்து, குடிநீர் பாட்டிலில் உள்ள இரட்டை இலையை மறைக்க  உத்தரவிட்டது சரியானதுதான், அதை ரத்து செய்யக்கூடாது, தேர்தல்  ஆணைய அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் உத்தரவை எதிர்த்து  கேள்வி கேட்க முடியாது. சட்டப்படி தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதய சூரியன், மரம், சைக்கிள் ஆகியவற்றுடன் இரட்டை இலை  சின்னத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் இலை சின்னம் அரசு செல வில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் அரசு சொத்தில்  வரையப்பட்டுள்ளது. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட  வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் கூறியுள்ளது. இந்த மனு  இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பாக  மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, ஸ்டாலின் சார்பாக வழக்கறிஞர்கள் விடுதலை,  நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதாடுகிறார்கள்.