Home இந்தியா பா.ஜ.க.கூட்டணி தொகுதி பட்டியல் அறிவிப்பு – தமிழகத்தில் 5 முனை போட்டி!

பா.ஜ.க.கூட்டணி தொகுதி பட்டியல் அறிவிப்பு – தமிழகத்தில் 5 முனை போட்டி!

713
0
SHARE
Ad

Tamil_Daily_News_56900751591சென்னை, மார்ச் 21 – தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவானதைத் தொடர்ந்து, ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

மூன்று மாதமாக நடந்த பேச்சுவார்த்தையில், தொகுதிகள் ஒதுக்குவதற்கு மட்டுமே 2 மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள், பாஜக, பாமக தலா 8 தொகுதிகள், மதிமுக 7, கொங்கு, ஐஜேகே, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதன்பின், கடந்த ஒரு மாதமாக யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பதில் இழுபறி நிலை இருந்து வந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே பாமக 10 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்து பிரசாரம் செய்து வந்தது.

#TamilSchoolmychoice

அதில் பெரும்பாலான தொகுதிகளை பாஜவும், தேமுதிகவும் கேட்டு வந்தன. குறிப்பாக சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை கேட்டனர். ஆனால், இதை பாமக ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாமக அறிவித்தது. 111இதனால், 12 தொகுதியில் பாமக வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். இது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பாமகவை வெளியேற்றுவது குறித்து கூட்டணித் தலைவர்கள் பேசத் தொடங்கினர். இது தெரிந்ததும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.

அதேநேரத்தில், பாமகவை கூட்டணியில் இருந்து அனுப்பி விட்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு செய்வதற்கான பட்டியலுடன் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு டெல்லி சென்றது.

அவர் பாஜக தலைவர்களுடன் நேற்று காலை வரை பேசினார். அப்போது ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்த அன்புமணி, வேறு வழியில்லாததால், விட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்.

சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் தேமுதிக கேட்டதால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் சுமூக உடன்பாடு நேற்று காலையில் ஏற்பட்டது.சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலை அறிவித்தார்.

அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டனர். பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் தனித்துப் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

05-karunanidhi-meeting-with-party-leaders4-600விசிக 2, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தனது பிரசாரத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். திமுக தலைவர் கருணாநிதி 5-ஆம் தேதி கோவையில் பிரசாரத்தை தொடங்கி 21-ஆம் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை முடிக்கிறார்.

அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுத்ததால் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினர். அதிமுக, தமிழ்நாடு,புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 3-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி, மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.

கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து, தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

இந்தக் கூட்டணியில் மாநில தலைவர்கள் யாரும் போட்டியிடவில்லை. ஆனால் தற்போதைய நாடாளுமன்ற உரிப்பினர்கள் மற்றும் admk-logoமுன்னாள் நாடாளுமன்ற உரிப்பினர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஐந்தாவதாக காங்கிரஸ், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதற்காக 39 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். அதில் இருந்து தொகுதிக்கு தலா 3 பேரை தேர்வு செய்து, அகில இந்திய தலைமைக்கு அறிவித்துள்ளனர்.

அவர்கள் பட்டியலை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளனர். அதில் தற்போது நாடாளுமன்ற உரிப்பினர்களாகவுள்ள 8 பேரில் 6 பேருக்கு சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வேட்பாளரை அறிவிக்காத நிலையிலும், காங்கிரஸ் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.இப்போது தமிழகத்தில் 5 கட்சிகள் தலைமையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பது உறுதியாகியுள்ளது.

downloadஇதுவரை இல்லாத அளவில் 5 கட்சிகள் தனித்தனி அமைத்து தேர்தலைச் சந்திப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருவதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.