Home இந்தியா தேர்தலில் உத்தர பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் போட்டி – சிவசேனா கட்சி அறிவிப்பு!

தேர்தலில் உத்தர பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் போட்டி – சிவசேனா கட்சி அறிவிப்பு!

815
0
SHARE
Ad

700eb803-7778-4967-8c08-dbcd5ce4a9c6_S_secvpfமும்பை, மார்ச் 22 – நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியம் மட்டுமல்லாமல் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுட் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னமும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில், சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுட் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் மராட்டியத்தில் மட்டும் தான் பா.ஜ.க. கட்சியினருடன் கூட்டணி அமைத்துள்ளோம். உத்தர பிரதேசத்தில் இல்லை. ஆகையால், நாட்டின் பிற பகுதிகளிலும் நாங்கள் எங்கள் கட்சியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

#TamilSchoolmychoice

உத்தர பிரதேசத்தில் 20 வேட்பாளர்களை சிவசேனா கட்சி களம் இறக்கும். அதே போல், பீகாரில் 5 தொகுதிகளிலும், டெல்லியில் 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என சஞ்சய் ராவுட தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், யுவசேனா அமைப்பின் தலைவருமான ஆதித்யா தாக்கரே டுவிட்டர் வலைதளத்தில் கூறுகையில், ‘‘உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் லக்னோவில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை எதிர்த்து எங்கள் வேட்பாளர்களை களமிறக்க மாட்டோம். இதில் யாரேனும் முரண்பட்ட கருத்துகள் கொண்டிருந்தால், வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறி இருந்தார் ஆதித்யா தாக்கரே.