Home இந்தியா அருண்ஜெட்லியை எதிர்த்து அம்ரிந்தர்சிங் போட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அருண்ஜெட்லியை எதிர்த்து அம்ரிந்தர்சிங் போட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

590
0
SHARE
Ad

ArunjetlyDT22032014புதுடெல்லி, மார்ச் 22 – அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழு நேற்று 26 காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. அதில் உள்ள முக்கிய வேட்பாளர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர்சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் அந்த தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் அருண்ஜெட்லியை எதிர்த்து போட்டியிடுகிறார். பஞ்சாபின் அனந்த்புர் தொகுதியில் அம்பிகா சோனியும், மராட்டிய மாநிலம் யவத்மால் வாசிம் தொகுதியில் சிவாஜிராவ் மோகேயும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர பீகாரில் 2 வேட்பாளர்களும், மேற்கு வங்காளத்துக்கு 21 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

 

Comments