மார்ச் 22 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஐ பேட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருளை இம்மாதம் 27-ஆம் தேதி வெளியிடவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முதலீட்டாளர்களின் நெருக்கடி காரணமாக தான், ஐஓஸ் இயங்குதளம் கொண்ட ஐபேட்களில், ஆபீஸ் மென்பொருளை வெளியிடயிருக்கின்றது என்றும், இதற்காக அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 2.5 பில்லியன் வருவாயை இழந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பல தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐபேட்களுக்கான இந்த புதிய மென்பொருள் பற்றி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, வரும் மார்ச் 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்ந்த பிறகு, நாதெல்லா சந்திக்க இருக்கும் முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இதுவாக இருக்கும் என்பது கூடுதல் தகவலாகும்.