Home உலகம் உலக தண்ணீர் தினம் 2014: இந்தியா, சிங்கப்பூருக்கு விருது!

உலக தண்ணீர் தினம் 2014: இந்தியா, சிங்கப்பூருக்கு விருது!

1069
0
SHARE
Ad

waterஜப்பான், மார்ச் 24 – ஜப்பான் தலைநகரான டோக்கியோவில், ஐ.நா. சபை நடத்திய உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டில் நீர் மேலாண்மைக்கான ‘Water for Life’ என்னும் விருதினை இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்விழாவின் தலைவர் மிச்செல் ஜெராட் வெளியிட்ட அறிக்கையில், “ நீர் மேலாண்மை விருதை பெறும் இந்த இரு நாடுகளும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதில் நிலையான நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் மேலும் எதிர்காலத்தில் நீர் மேலாண்மை கொள்கையைப்  பின்பற்றுவதில் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அறிக்கையில், “இந்தியாவிற்கு, தண்ணீர் பற்றாக்குறையை அடிப்படையாக கொண்ட டாடா நீர் கொள்கை திட்டத்திற்காக (Tata Water Policy Programme) காகவும், சிங்கப்பூரில் தினசரி தண்ணீர் தேவையான 30 சதவீததை அடையும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ‘New water’ திட்டத்திற்காகவும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது” என அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நீர் மேலாண்மையில் சிறந்த பங்கேற்பு, தகவல் தொடர்பு, விழிப்புணர்வு என பல்வேறு கூறுகளில் இந்த விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.