Home உலகம் வாஷிங்டனை வாட்டும் கடும் மழை, நிலச்சரிவில் 4 பேர் பலி!

வாஷிங்டனை வாட்டும் கடும் மழை, நிலச்சரிவில் 4 பேர் பலி!

425
0
SHARE
Ad

127-600x428ஒலிம்பியா, மார்ச் 25 – வாஷிங்டன்னில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். 18-க்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து நாசமாகிவிட்டன. இடிபாடுகளின் ஆழம் கிட்டத்தட்ட 15-அடிக்கு மேல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஓசோக்கு அருகில் ஏற்பட்ட கடும் மழையில் 8 பேர் கடுமையான காயமடைந்தனர். இந்த மழையால் சுமார் 6 வீடுகள் மொத்தமாக அடித்துச்செல்லப்பட்டன.

ஆனால், இடிபாடுகளுக்கு இடையில் தீவிரமாக தேடிய பின்பும் யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியகூறுகள் இல்லை” என்று கூறியுள்ளனர் தேடுதல் படையினர்.

#TamilSchoolmychoice

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேடுதல் வட்டாரங்கள் கூறுகின்றன.வாஷிங்டனின் ஆளுநர் ஜே இன்ஸ்லீ நேற்று விமானத்தின் மூலம் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டார்.

நாம் இன்னும் சில மோசமான செய்திகளால் பாதிப்படையலாம்” என அவர் கூறினார். தொடரும் இந்த கனமழை பாதிப்பால் வெள்ள அபாயம், ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.வாஷிங்டனில் இதனால் அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.