Home இந்தியா இரண்டு முறை வாக்களிப்பது தொடர்பான சர்ச்சை! -சரத் பவாரிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்!

இரண்டு முறை வாக்களிப்பது தொடர்பான சர்ச்சை! -சரத் பவாரிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்!

610
0
SHARE
Ad

f7a4655c-effd-4769-a168-935e7960e4cb_S_secvpfமும்பை, மார்ச் 25 – இரண்டு முறை வாக்களிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் படி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத் பவாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் கடந்த ஞாயிறு  அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சரத் பவார் 2009-ஆம் ஆண்டு மும்பை மற்றும் சத்ராவில் ஒரே நாளில் தேர்தல் நடந்ததை பற்றி குறிப்பிட்டார்.

ஆனால் இந்த முறை வெவ்வேறு தேதிகளில் வாக்குபதிவு நடைபெறவுள்ளதை சுட்டிகாட்டிய அவர், தொண்டர்கள் அனைவரும் இரு இடங்களில் சென்று இருமுறை வாக்களிக்கலாம் என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அளித்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், சரத் பவாரின் பேச்சில் நடத்தை விதிமீறல்கள் நிகழ்ந்திருப்பதற்கான மூகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது.

ஒருவரின் ஓட்டை அவரது பெயரை பயன்படுத்தி போடுவது, ஒருவரது  ஓட்டை ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்வது, இருவேறு  இடத்தில் ஓட்டுரிமை பெறுவது ஆகியவை ஐ.பி.சி 177டி-யின் படி குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

இதேபோன்று வாக்குபதிவு செய்ததற்கான அடையாலமையை அளித்து விட்டு மீண்டும் ஓட்டளிக்க முயற்ச்சிப்பதும் 1961-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை வீதி 49-சி-யின் படி தண்டனைக்கூரிய குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பாக சர்த பவார் நாளை மாலை 5-மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம்.