Home கலை உலகம் சூர்யாவுடன் நடிக்க மறுத்த பாலிவுட் நாயகி!

சூர்யாவுடன் நடிக்க மறுத்த பாலிவுட் நாயகி!

596
0
SHARE
Ad

1surya_1714918g (1)சென்னை, மார்ச் 25 – சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை பாலிவுட் நாயகி சோனாக்ஷி மறுத்துவிட்டார். சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்குகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட பாலிவுட் வில்லன் நடிகர் சத்ருஹன் சின்ஹா மகள் சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டார் லிங்குசாமி.

முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்த சோனாக்ஷி தற்போது பின்வாங்கிவிட்டார். இரண்டு கட்டமாக சோனாக்ஷியை சந்தித்து பேசினார் லிங்குசாமி. சம்பளம் மற்ற விவரங்கள்பற்றி இதில் பேசப்பட்டதாக தெரிகிறது.

#TamilSchoolmychoice

என்ன சம்பளம் கேட்கிறாரோ அதை தர இயக்குனர் தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வாய்ப்பை ஏற்க மறுத்து, சில பிரச்சனையால் வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்று சமாதானம் கூறி இருக்கிறார்.

சூர்யா படத்துக்காக வாய்ப்பு கேட்கும் அதேதேதியில், மனோஜ் பாஜ்பாயுடன் பாடல் காட்சியில் நடிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டேன்.

அதனால் இந்த வாய்ப்பை ஏற்க முடியாத சூழல் உள்ளது என்று பதில் அளித்திருக்கிறார் சோனாக்ஷி. இதையடுத்து தேசி பாய்ஸ் இந்தி படத்தில் நடித்த சித்ரங்கதா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரை வைத்து பாடல் காட்சி படமாகிறது.