Home இந்தியா திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்!

திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்!

530
0
SHARE
Ad

Alagiri-MK-300-x-200மார்ச் 25 – திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட  கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, அதிரடியாக திமுகவிற்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து வருவதைத் தொடர்ந்து கடுமையான கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் கருணாநிதி அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், திமுக-வில் இருந்து மு.க.அழகிரி, தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அழகிரின் நடவடிக்கைகள் கட்சியின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்கிறது என்பதால், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக, இன்று திமுக தலைவர் மு.கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து திமுக செயலாளர் பேராசிரியர் க.அன்பழனுடன் ஆலோசனை செய்து, இத்தகைய முடிவுக்கு வந்ததாகவும் கருணாநிதி தெரிவித்தார்.