Home இந்தியா ‘ஜெயலலிதா பிரதமரானால், குடியரசு மாளிகை இட்லி கடையாக மாறும்’ – திண்டுக்கல் லியோனி!

‘ஜெயலலிதா பிரதமரானால், குடியரசு மாளிகை இட்லி கடையாக மாறும்’ – திண்டுக்கல் லியோனி!

991
0
SHARE
Ad

Pattimandramதிருநீர்மலை, மார்ச் 27 – திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது,  இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. சுதந்திரம் இல்லாமல் செயல்படுகின்றனர்.

சுழல் விளக்கு கொண்ட கார், பாதுகாப்புக்கு காவலர்கள் இருந்தும் தொடை நடுங்கி அமைச்சர்களாக உள்ளார்கள். பொதுக்கூட்ட மேடை அமைக்க ஜாதகம் பார்க்கும் ஜெயலலிதாவால், அரசை எப்படி நடத்த முடியும்.

ஜெயலலிதா பிரதமர் ஆனால், குடியரசு மாளிகையை இட்லி கடையாக மாற்றிவிடுவார். தமிழகத்தில் ஜனநாயகம் செத்து விட்டது. திமுக ஆட்சியின் நிர்வாக திறமையால் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்றது.

#TamilSchoolmychoice

தற்போது கடும் விலைவாசி உயர்வால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. 150 ஆண்டுகால கனவான சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திமுக போராடி வருகிறது.

ஆனால், இந்த திட்டத்தை தமிழக அரசு முடக்க நினைக்கிறது. சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும் என லியோனி பேசினார்.