அமெரிக்கா, மார்ச் 27 – அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு துறை(NSA) தீவிரவாதிகளின் செயல்களை உளவுபார்த்தல் என்ற பெயரில் உலக நாடுகளின் தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டு கேட்டது.
சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பிய என்.எஸ்.எ வின் இந்த செயலைக் கண்டித்து உலக நாடுகள் அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்த சர்சைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு துறையினர் தொலைபேசி உரையாடல்களின் தகவல்களை திரட்டுவது நிறுத்தப்படுகிறது.
ஆனால் அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேவையான தகவலை பெற அனுமதிக்கப்படும்” என முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.எ வின் இந்த ஒட்டு கேட்டகும் செயலை, அதன் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்நோடென் அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.