நயன்தாராவின் பிடித்தமான உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இந்த இறால் தான். அவர் எந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டாலும், அவருடைய உணவில் கண்டிப்பாக இறால் இருக்குமாம்.
இறால் கிடைக்காத இடமாக இருந்தாலும் கூட, எங்கயாவது தேடிப் பிடித்து வரவைத்து அவருக்கு அதை கொடுத்து தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படுத்துவார்களாம்.
அப்படி இறால் மீது பெரும் காதல் கொண்ட நயன்தாராவுக்கு, தற்போது மாருத்துவர்கள் இறால் சாப்பிடக்கூடாது என்று தடைபோட்டியிருக்கின்றனர். தனது சருமத்தில் பளபளப்பு குறைவது குறித்து மருத்துவரிடம் நயன்தாரா ஆலோசனை நடத்தினார். அப்போது, மருத்துவர் கூறியதாவது முதலில் இறால் சாப்பிடுவதை நிறுத்துங்கள்,
அதனால் தான் சரும பளபளப்பு குறைகிறது என்று கூறிவிட்டார். இறால் சாப்பிடக்கூடாது என்ற மருத்துவர்கள் அறிவுரையினால், இறாலும் போச்சே! என்று நயன்தாரா வேதனையில் இருக்கிறார்.