Home வாழ் நலம் குளிர்பானம் குடித்தால் இதயம் பாதிக்கும்!

குளிர்பானம் குடித்தால் இதயம் பாதிக்கும்!

840
0
SHARE
Ad

soft drinksமார்ச் 29 – காபி டீ குடிக்கீறார்களோ இல்லையோ குளிர்பானம் குடிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. இப்படி அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு  ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை  அடிக்கடி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்குக் காரணம் குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும்  பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும்  தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை  அதிகரித்து, இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.p53

ஆனால் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.

லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வு முடிவில், சர்க்கரை அதிகம் கொண்ட காலை நேர உணவு வகைகளை அதிகம்  சாப்பிடுபவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 38% அதிகம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதனால் கூல்டிரிங்க்ஸ்  குடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுங்கள் ஏனெனில் கூல்டிரிங்க்ஸ் சாப்பிவதன் மூலம் ஆண்களுக்கு பற்களில் கறை மற்றும்  ஆண் ஊறுப்புகளில் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்ப அதிகம்