Home தொழில் நுட்பம் ஐபேட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலி வெளியீடு!

ஐபேட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலி வெளியீடு!

532
0
SHARE
Ad

satyaமார்ச் 29 – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா, கடந்த வியாழக்கிழமை, ஆப்பிள் ஐ-பேட்களுக்கான, ஆபீஃஸ் செயலியை வெளியிட்டார்.

இந்த செயலியை ‘ஆப்பிள் ஸ்டோர்’ (Apple Store) களில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல், ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இயலும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு என்ன பயன்?

#TamilSchoolmychoice

இலவசமாகக் கிடைக்கும் இந்த செயலியினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆபீஃஸ் செயலியைக் கொண்டு கோப்புகளை திறந்து பார்க்க இயலுமே தவிர மாறுதல்கள் (Edit) செய்ய இயலாது. பயனர் மாறுதல் செய்ய விரும்பினால் ஆபீஃஸ் 365 என்ற துணை செயலியை பயன்படுத்த வேண்டும். ஓர் ஆண்டுக்கு ஆபீஃஸ் 365 Home Premium மற்றும் Business Premium முறையே 100 அமெரிக்க டாலர்களுக்கும், 60 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.

ஆபீஃஸ் செயலியை பயனாளர்களுக்கு மத்தியில் அதிகமாக உபயோகிக்கச் செய்து, அதன் மூலம் ஆபீஃஸ் 365 மற்றும் ஒன் டிரைவ் போன்ற தன் தயாரிப்புகளை வாங்கச் செய்வதே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் யுக்தியாகும்.