Home வணிகம்/தொழில் நுட்பம் நஷ்டத்தில் பிளாக் பெர்ரி நிறுவனம்!

நஷ்டத்தில் பிளாக் பெர்ரி நிறுவனம்!

673
0
SHARE
Ad

Blackberryமார்ச் 29 – செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்த பிளாக் பெர்ரி நிறுவனம், சமீபத்திய நிதியாண்டில் சுமார் 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

செல்பேசிகளின் ஆரம்பக் காலங்களில் அந்தஸ்த்தின் அடையாளமாகத் தெரிந்த பிளாக் பெர்ரி, ஆப்பிள் திறன்பேசிகள் மற்றும் சாம்சங்கின் ஆண்டிராய்டு திறன்பேசிகளின் வருகையால் நஷ்டப்பாதைக்குத் திரும்பியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சென் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“நடப்பு நிதியாண்டில் பிளாக் பெர்ரி நிறுவனம் அறிமுகப்படுத்திய z10 திறன் பேசிகள் 934 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நான்காம் காலாண்டில் நிறுவன வருவாய் 976 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் சரிந்தது. ஆனால் இந்த நஷ்டமானது அனுமானிக்கப்பட்ட தொகையை விடக் குறைவு. எனவே பிளாக் பெர்ரி நிறுவனம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்சமயம், பிளாக் பெர்ரி நிறுவனம் Q20 என்ற திறன்பேசிகளை வெளியிடும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.