வேட்பாளர்கள் வீட்டு முன்பு கண்காணிப்பு கேமராக்களை வைப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் முன்பு இந்த கேமராக்களை பொருத்தி இருந்தோம்.
அங்கிருந்து பணம், பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும். ஆனால் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில், எல்லாரது வீட்டு முன்னும் கேமராக்களை பொருத்துவது அவசியமற்றது. எனவே இது தேவையில்லை என்றே நினைக்கிறேன் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
Comments