Home நாடு MH370: காக்பிட்டில் இருந்து பெறப்பட்ட முழு உரையாடல்களையும் அரசாங்கம் வெளியிட்டது!

MH370: காக்பிட்டில் இருந்து பெறப்பட்ட முழு உரையாடல்களையும் அரசாங்கம் வெளியிட்டது!

532
0
SHARE
Ad

trasnகோலாலம்பூர், ஏப்ரல் 2 – மாயமான மாஸ் MH370 விமானத்திற்கும், கோலாலம்பூர் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடந்த முழு உரையாடல்களையும் அரசாங்கம் நேற்று வெளியிட்டது. ஆனால் அதில் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடல்கள் பயணிகளின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

“அந்த உரையாடல்களில் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு இந்த உரையாடல்கள் காவல்துறையின் விசாரணையில் இருந்ததாகவும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.

கடைசியாக விமானத்தில் இருந்து கிடைத்த தகவலை வழங்கியது யார் என்பது குறித்து அந்த குரலை தடவியல் நிபுணர்கள் விசாரணை செய்து வருவதாகவும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.