Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!

மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!

869
0
SHARE
Ad

ananda-krishnanகோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசியாவில் பொருளாதார தடுமாற்றம் மற்றும் பணமதிப்பு சரிவு போன்ற சூழ்நிலைகள் இருந்தாலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் நிறையவே இருக்கின்றது.

போர்ப்ஸ் மலேசியா பத்திரிக்கை மலேசிய கோடீஸ்வரர்கள் 18 பேரின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் நீயென் உள்ளார். இவருக்கு வயது 91 ஆகிறது. இவர் சொத்து மதிப்பு 38 பில்லியன்  ஆகும். டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனந்த கிருஷ்ணனின் வயது 76. இவரின் புனைப் பெயர் ஏகே ஆகும். எண்ணெய், எரிவாயு, ஊடகத்துறை மற்றும் துணைக்கோளம் ஆகிய துறைகளில் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இந்நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய முதல் 10 பணக்காரர்கள்:

1.டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் நீயென் (வயது 91)

2.டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் (வயது 76)

3.டான்ஸ்ரீ லிம் கோக் தை (வயது 62)

4.டான்ஸ்ரீ குவெக் லெங் சான் (வயது 71)

5.டான்ஸ்ரீ தே ஹோங் பியோவ் (வயது 84)

6.டான்ஸ்ரீ லீ சின் சியோங் (வயது 75)

7.டான்ஸ்ரீ சைட் மொக்தார் அப்புக்ரி (வயது 62)

8.டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் இயோ தியோங் லாய் (வயது 84)

9.டான்ஸ்ரீ டத்தோ தியோங் ஹியூ கிங் (வயது 79)

10.டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ வின்செண்ட் தான் சீ யூவென் (வயது 62)