Home கலை உலகம் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்!

ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்!

517
0
SHARE
Ad

923096_613630878691145_2133019102_nசென்னை, ஏப்ரல் 3 – கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கிடையில், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்விகளும், அதற்கு பல்வேறு செய்திககளும் வெளியாகிக் கொண்டிருக்க,

அதை அனைத்தையும் பொய்யாக்கியுள்ளார் அஜித். கே.வி.ஆனந்த், விஷ்ணு வர்தன், சிவா ஆகிய இயக்குநர்களின் படங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி, அஜித், கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்தப் பிறகு, ஷங்கருடன் கைகோர்க்க போகிறாராம்.

ஷங்கர், அஜித்திடம் ஒரு கதையை சொன்னாராம், கதை பிடித்துப் போகவே அஜித் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். கெளதம் மேனனின் படத்திற்குப் பிறகு அஜித், இந்த படத்தில் தான் நடிக்கப் போகிறார். இதில் அஜித்துக்கு இரட்டை வேடமாம்.