Home உலகம் இங்கிலாந்தில் காமன்வெல்த் நடைபெறும் கிளாஸ்கோ நகரில் கடுமையான வான்வெளிக் கட்டுப்பாடுகள்!

இங்கிலாந்தில் காமன்வெல்த் நடைபெறும் கிளாஸ்கோ நகரில் கடுமையான வான்வெளிக் கட்டுப்பாடுகள்!

495
0
SHARE
Ad

commonweaothகிளாஸ்கோ, ஏப்ரல் 3 – எதிர் வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி, இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் இங்கிலாந்து அரசு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

குறிப்பாக தீவிரவாதிகள் வான்வழியே தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், வான்வெளிக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்நாட்டின் அதிகார பகிர்வு சட்டத்தின்படி, விமானப் போக்குவரத்து என்பது, நாடாளுமன்றப் பொறுப்பின் கீழ் வருகின்றது. எனவே ஜூலை 13-ஆம் தேதியிலிருந்து காமன்வெல்த் போட்டிகள் முடியும்.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை தற்காலிக வான்வெளிக் கட்டுப்பாடுகளை உருவாக்குமாறு காவல்துறை நாடாளுமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பும் ஸ்காட்லாந்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால் பாதுகாப்பு முறைகளை தேவைப்பட்டால் அதிகரிக்கும் அதிகாரமும் அரசுக்கு உண்டு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.