Home நாடு MH370 தேடல்: விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே அதிக செலவு!

MH370 தேடல்: விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே அதிக செலவு!

556
0
SHARE
Ad

140309-N-ZZ999-007கோலாலம்பூர், ஏப்ரல் 5 – மாஸ் விமானம் MH370 மாயமாகி இன்றோடு 29 நாட்களாகி விட்டன. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, இதுவரையில் நடத்தப்பட்ட அனைத்துலக தேடுதல் வேட்டையில், விமானத்தின் பாகங்கள் என்று கூறும் ஒரு சிறிய ஆதாரம் கூட கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 28 நாட்களாக தேடுதல் பணிக்காக செலவிடப்பட்டுள்ள 160.7 மில்லியன் ரிங்கிட் நிதி இதுவரையில் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே அதிக செலவு செய்யப்பட்ட ஒன்றாகும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா (Fairfax Media) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதிக்கணக்கு கூட செலவிடப்பட்ட தொகையை வெளியிட்ட நாடுகளின் பட்டியலை வைத்து தயார் செய்யப்பட்டது என்றும், இன்னும் சில நாடுகள் தங்களது கணக்கை வெளியிடவில்லை என்றும் ஆஸ்திரேலியாவின் மற்றொரு செய்தி நிறுவனமான சிட்னி மார்னிங் ஹெரால்டு (Sydney Morning Herald) குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் 447 விமானத்தைக் கண்டுபிடிக்க செலவிடப்பட்ட 164 மில்லியன் ரிங்கிட்டை விட தற்போது MH370 -வுக்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள செலவு கணக்குகள்:

HMAS சக்சஸ் – நாளொன்றுக்கு 550,000 ஆஸ்திரேலிய டாலர் – இரண்டு வாரங்களுக்கு 7.7 மில்லியன் ஆஸி டாலர் செலவு ( 23.3 மில்லியன் ரிங்கிட்)

HMAS டூவூம்பா – நாளொன்றுக்கு 380,000 ஆஸ்திரேலிய டாலர் – ஒரு வாரத்திற்கு 2.66 மில்லியன் ஆஸி டாலர் செலவு (8.1 மில்லியன் ரிங்கிட்)

அமெரிக்க பிங்கர் லொகேட்டர் கருவி – செலவு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் (12 மில்லியன் ரிங்கிட்)

அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்கள் – செலவு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் (10.8 மில்லியன் ரிங்கிட்)

வியட்நாம் தேடல் – 8 மில்லியன் அமெரிக்க டாலர் (26.2 மில்லியன் ரிங்கிட்)

தேடுதல் பணிகளில் ஈடுபட்ட மொத்தம் 26 நாடுகளில் இதுவரை ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது செலவுக் கணக்குகளை அறிவித்துள்ளன. மற்ற நாடுகள் வெளியிடவிருக்கும் கணக்குகள் மூலம் இந்த மொத்த செலவுத்தொகை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதுதவிர, புலனாய்வுத்துறை அதிகாரிகள், காவல்துறை, விமான விபத்தை ஆராயும் விசாரணை அதிகாரிகள் ஆகியோருக்கான செலவுகளும் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.