Home இந்தியா ஹேமமாலினிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ஹேமமாலினிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

474
0
SHARE
Ad

Hemamaliniடெல்லி, ஏப்ரல் 5 – தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் ஹேமமாலினிக்கும், ராஷ்ட்ரீய லோக் தள கட்சி வேட்பாளர் ஜெயந்த் சௌத்ரிக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மதுராவில் தேர்தல் அதிகாரி விஷால் சௌஹான் வெள்ளிக்கிழமை கூறுகையில்,

“”ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் முன் அனுமதியின்றி ஹேமமாலினியும், ஜெயந்த் சௌத்ரியும் பத்திரிகைகளில் தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவ்வாறு விளம்பரங்களை வெளியிடுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே ஆணையத்திடம் அனுமதிச் சான்றிதழை பெற வேண்டும். அதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக் கூடாது என்று இருவருக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்றார்.