Home நாடு MH 370 – கடலில் இருந்து வெளியாகும் மின்னியல் துடிப்பு ஒலிகளை நோக்கி விமானங்களும் கப்பல்களும்...

MH 370 – கடலில் இருந்து வெளியாகும் மின்னியல் துடிப்பு ஒலிகளை நோக்கி விமானங்களும் கப்பல்களும் தேடுதல் வேட்டை!

679
0
SHARE
Ad

MH370 SEARCHஏப்ரல் 6 – ஏறத்தாழ ஒரு மாதமாக தேடியும் மாஸ் விமானம் கிடைக்காத நிலையில் இன்று கடலில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னியல் (Electronic) ஒலிகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அந்த ஒலிகள் இருந்து புறப்பட்ட இடம் என்று நம்பப்படும் இடத்தைக் குறி வைத்து தேடுதல் வேட்டைகள் இன்றும் தொடர்ந்துள்ளன.

#TamilSchoolmychoice

ஆனால், இந்த ஒலிகள் காணாமல் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வெளியானவையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை.

வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் கடலில் இருந்து நாடித் துடிப்பு போன்ற ஒலிகள் கிடைத்ததாக சீன கடற்படைக் கப்பல் ஒன்று தகவல் தந்ததை அடுத்து, அந்த இடத்தை நோக்கி பிரிட்டனின் கடற்படைக் கப்பல் ஒன்று விரைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

அதே கடல் பகுதியில் மற்றொரு இடத்தில் இதே போன்றதொரு ஒலி வெளியாவது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்றும் அந்த இடத்தை நோக்கி சென்றுள்ளதாக, ஆஸ்திரேலியாவின் தேடுதல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்தக் கப்பலில் அதி நவீன தொழில் நுட்பக் கருவிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிகளின் தன்மை கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் தற்போதைக்கு இந்த துடிப்பொலிகள் தேடுதல் வேட்டையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றும் தொடர்ந்த தேடுதலில் 10 ஆகாய விமானப்படை விமானங்கள், இரண்டு தனியார் விமானங்கள், 13 கப்பல்கள் தேடுதல் பணிகளில் உதவியாக களமிறங்கின.

பெர்த் நகரிலிருந்து ஏறத்தாழ 2,000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கடல் பகுதியில் தேடுதல்கள் இன்று தொடர்ந்தன.