Home கலை உலகம் ஐ திரைப்பட இசை விழாவில் அர்னால்டா!

ஐ திரைப்பட இசை விழாவில் அர்னால்டா!

540
0
SHARE
Ad

620x397xVikram-I-Movie-First-Look-Poster.jpg.pagespeed.ic.6L1wukzDSZசென்னை, ஏப்ரல் 7 – ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் ‘ஐ’ திரைப்படம் முடியும் கட்டத்தில் உள்ளது.கோடையில் வெளிவரயிருக்கும் இப்படத்தை பற்றி பல நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியோ படத்தின் டிரைலர் பற்றியோ எந்த தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.

மேலும் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் இப்படத்தின் இசையையும் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களோ என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழும்பியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இப்படத்தின் இசை வெளியீட்டை சர்வதேச பிரபலங்களை வைத்து பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சர்வதேச பிரபலங்கள் என்றால் இதில் அர்னால்டும் இருப்பார் என்று கோடம்பாக்கம் வட்டாரம் பல சர்ச்சைகளை வெளியிட்டு வருகிறது.

இவர்கள் யாரை அழைத்தாலும் சரி இப்படத்தின் இசைக்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் பலர்.