Home இந்தியா இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசி தேர்தலாக இருக்கலாம் – கருணாநிதி!

இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசி தேர்தலாக இருக்கலாம் – கருணாநிதி!

534
0
SHARE
Ad

06-1396760663-karunanidhi-1-600கோவை, ஏப்ரல் 7 – இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசித் தேர்தலாகக் கூட இருக்கலாம். எனவே மக்களுக்காக நல்லாட்சியை தர வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் உள்ளதாக தனது கோவை பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி உருக்கமாக தெரிவித்தார்.

16-வது நாடாளுமன்றத் தேர்தல் நாளை தொடங்கி 9 கட்டங்களாக வரும் மே 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.ராசா, கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கணேஷ்குமார்,

#TamilSchoolmychoice

பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த சில மாதங்களாகவே மிகுந்த உடல் நலிவுக்கு இடையே சிரமப்பட்டுக்கொண்டு இருக்கின்ற நான், இன்றைய தினம் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.

வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் நிரம்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விடைபெற இருக்கிறேன்.

கருணாநிதி 91 வயதிலும் உழைக்கிறார் என்று பேசினீர்கள். ஆனால் தள்ளாடும் பருவத்தில் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக்கூடாது. என்னுடைய இனம் தள்ளாடக்கூடாது. என்னுடைய சுயமரியாதை தள்ளாடக் கூடாது.

ஒரு வேளை இதுவே நான் கலந்துகொள்கிற கடைசி தேர்தலாக இருக்கலாம். அப்படி சொல்லாதே சொல்லாதே என்று கையை வீசுகிறீர்கள். அப்படி சொல்லாமல் இருக்க முடியாது.

ஏன்னென்றால் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம் என்ற உறுதியை நீங்கள் அளித்தாக வேண்டும். அப்படி செய்தால், நான் இன்னும் 50 வருடங்கள் உயிரோடு இருப்பேன். இல்லை அடிமையாக வாழ வேண்டிய நிலை இருக்குமானால், அது வாழ்க்கையாக இருக்காது என கருணாநிதி உருக்கமாக தெரிவித்தார்.