Home வணிகம்/தொழில் நுட்பம் சாம்சங் நிறுவனத்தின் இலாபம் இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சி!

சாம்சங் நிறுவனத்தின் இலாபம் இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சி!

601
0
SHARE
Ad

Samsung logo 300 x 200ஏப்ரல் 9 – தென் கொரியாவைச் சேர்ந்த திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics Co Ltd) தனது இரண்டாம் காலாண்டில், இலாபக் கணக்கில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இது குறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் சாம்சங் நிறுவனத்தின் இலாபம் 4.3% (RM 26.04 பில்லியன்) அளவு வீழ்ச்சியடைந்துள்ளது” என அறிவித்துள்ளது.

எனினும் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் Galaxy S 5 – ன் விற்பனையைப் பொறுத்து அடுத்த காலாண்டின் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Galaxy S4 ஐ காட்டிலும் Galaxy S5  – ன் விலையை 10% அளவு குறைத்துள்ளது.

#TamilSchoolmychoice

சாம்சங் நிறுவனம் மீண்டும் தனது இலாபக் கணக்கை பெறுவது பற்றி ஹெச்எம்சி முதலீடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்,

“சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பின் விலையைக் குறைத்து, விளம்பரத்திற்கு ஆகும் செலவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே தனது பழைய நிலைக்கு திரும்ப இயலும்” என்று கூறியுள்ளார்.