Home நாடு MH370: ஆஸ்திரேலிய கடற்படை இரு புதிய சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளது!

MH370: ஆஸ்திரேலிய கடற்படை இரு புதிய சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளது!

525
0
SHARE
Ad

Pingsபெர்த், ஏப்ரல் 9 – இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள் கடந்த 24 மணி நேரங்களில் இரண்டு புதிய ஒலித் துடிப்பு சமிக்ஞைகளை (pings) பதிவு செய்துள்ளன.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேடுதல் பணிக்கு தலைமை வகிக்கும் அதிகாரி ஆங்கஸ் ஹௌஸ்டன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை 4.27 மணிக்கும் மற்றும் இரவு 10.17 மணிக்கும் இந்த ஒலித்துடிப்புகளை மீட்புப் படையினர் பதிவு செய்துள்ளதாக ஹௌஸ்டன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதல் ஒலித்துடிப்பு 5 நிமிடம் 32 நொடிகளும், இரண்டாவது ஒலித்துடிப்பு 7 நிமிடங்களும் இருந்ததாக ஹௌஸ்டன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு கடந்த சனிக்கிழமை, இந்த ஒலித்துடிப்புகளை இரண்டு முறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அதே வேளையில், அந்த ஒலித்துடிப்புகள் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தான் வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.