Home இந்தியா 3வது முறையாக கெஜ்ரிவாலுக்கு பளார்!

3வது முறையாக கெஜ்ரிவாலுக்கு பளார்!

489
0
SHARE
Ad

imagesபுதுடெல்லி, ஏப்ரல் 9 – ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3-வது முறையாக கன்னத்தில் அறை விழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் டெல்லியில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி, அரியானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கெஜ்ரிவாலை ஒருவர் தாக்கினார். அவர் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் என்று தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, 19 வயது வாலிபர் ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல் வாரணாசியில் அவர் மீது ஒரு நபர் கறுப்பு மையை வீசினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மேற்கு டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டார். கட்சித் தொண்டர்களிடம் அவர் கைக்குலுக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோ ஓட்டுநனர் ஒருவர் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அருகில் இருந்த தொண்டர்கள் ஓடிவந்து அந்த நபரை நைய புடைத்தனர்.

உடனடியாக அங்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் லாலி (38) என்பதும், அமன் விகாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என்றும் தெரியவந்தது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
என்பதால், அவரை அறைந்ததாக அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறினார். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பின்பு நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருப்போம் என்று நினைத்தால் அது தவறு. எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை நாங்கள் எதிர்த்து போராடுவோம் என்றார்.

அதைத் தொடர்ந்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு செல்வதாக கூறி, கெஜ்ரிவால் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதற்கிடையே, டிவிட்டர் இணையத்தள பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில், என்னையே ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

நான் ஒரு சிந்தனையாளர். என் மீது தாக்குதல் நடத்துவது, மை தெளிப்பது ஆகியவற்றால் என்ன சாதித்து விட்டார்கள் என்பதும் தெரியவில்லை. பிரச்சனைகளுக்கு வன்முறை சிறந்த தீர்வாகாது.

வேண்டுமானால் அவர்கள் முகவரி கூறினால், அந்த இடத்துக்கு நானே வருகிறேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கிக் கொள்ளட்டும் என்றார் கெஜ்ரிவால்.