Home இந்தியா 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் – சரத்குமார்!

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் – சரத்குமார்!

601
0
SHARE
Ad

Sarathkumar Mick1 copyகாஞ்சீபுரம், ஏப்ரல் 9 – நாடு நலம் பெற 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும், என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் சரத்குமார், காஞ்சீபுரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். 120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தது காங்கிரஸ் கட்சி. பொருளாதார சீர்கேட்டை உண்டாக்கியது அக்கட்சி தான்.

#TamilSchoolmychoice

சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நாடாளுமன்ற தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தி.மு.க தான். இதன் மூலம் வணிகர்களுக்கு துரோகம் செய்தது அக்கட்சி.

இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது சுயநலமிக்க அணிகள். இவற்றையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மத்தியில் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் பங்கேற்று தமிழகத்துக்கு தி.மு.க. செய்த நன்மைகள் என்ன? மக்கள் நலனுக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வருபவர் தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது.

நாடு நலம் பெற 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். மக்கள் வாக்களிக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்து இந்தியாவின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் உயர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என சரத்குமார் பேசினார்.