Home இந்தியா நரேந்திர மோடி பிரதமரானால் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் – விஜயகாந்த்!

நரேந்திர மோடி பிரதமரானால் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் – விஜயகாந்த்!

416
0
SHARE
Ad

Vijayakanth_hungerபுதுக்கோட்டை, ஏப்ரல் 9 – நரேந்திர மோடி பிரதமரானால் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கூட்டணியை தேர்ந்தெடுத்தால் தமிழகத்தில் மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதிமுக மற்றும் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். திமுக மற்றும் அதிமுக மக்களை சுரண்டுவதாகவும் விஜயகாந்த் விமர்சித்தார்.

#TamilSchoolmychoice