Home இந்தியா கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார் கெஜ்ரிவால்!

கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தார் கெஜ்ரிவால்!

527
0
SHARE
Ad

arvind-kejiriwal-350x250புதுடெல்லி,  ஏப்ரல் 10 – டெல்லி சுல்தான்புரி பகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் லாலி, கெஜ்ரிவாலிற்கு மாலை போடுவது போல் கன்னத்தில் அறைந்தார்.

இதில் காயமடைந்த கெஜ்ரிவால் காந்தி நினைவிடத்திற்கு சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். பிறகு தன்னை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் லாலியை கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது லாலி கூறியதாவது, “கெஜ்ரிவால்ஜி என்னை மன்னித்து விடுங்கள். நான் பெரும் தவறு செய்து விட்டேன்” என்று லாலி கூறினார். பின்பு  கெஜ்ரிவால் அவருக்கு ஆறுதல் கூறினார்.