Home India Elections 2014 போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தார் மோடி!

போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தார் மோடி!

778
0
SHARE
Ad

rajini modiசென்னை, ஏப்ரல் 14 – மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையில் நேற்று மாலை போயஸ் கார்டனில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு தேர்தலை முன்னிட்டு ரஜினியின் ஆதரவு வேண்டி இருக்கலாமோ என்ற ஆர்வத்தில் பத்திரிக்கைகள் அனைத்தும் அவரின் வீட்டிற்கு முன்னால் குவிந்தன.எனினும், இந்த சந்திப்பு வெறும் நலம் விசாரிப்பாக மட்டும் அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மோடியை சந்தித்து விட்டு வெளியே வந்த ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் உடல்நலமின்றி இருந்த போது மோடி தன்னை சந்தித்ததாகவும், அந்த நட்பில் அடிப்படையில் வீட்டிற்கு தேநீர் விருந்திற்கு அழைத்ததாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான இல. கணேசனை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக மோடி சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.