Home இந்தியா முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

570
0
SHARE
Ad

04-jayalalitha-new-photo-600சென்னை, ஏப்ரல் 14 – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, சித்திரை முதல் நாளாம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை கோலோகலமாய் கொண்டாடி மகிழ்கின்ற,

என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி” என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க்குடிமக்கள் சித்திரை முதல் நாள் இன்று தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

#TamilSchoolmychoice

புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.

இப்புத்தாண்டில் அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ்நாட்டினை  மேலும்  உயர்த்திட  இந்த இனிய  திருநாளில்  உறுதியேற்போம்.

இத்தமிழ்ப் புத்தாண்டில் இன்பமும், இனிமையும் தமிழர்தம்  இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.